[X] Close

“தனி ஒரு வீரரிடம் வீழ்ந்துவிட்டோம்!” - ஜடேஜாவை புகழ்ந்த கோலி

ஐபிஎல் திருவிழா

One-Man-Beat-us-says-RCB-skipper-Virat-Kohli-post-the-match-with-CSK-and-Praises-CSK-All-Rounder-Ravindra-Jadeja

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஞாயிறு அன்று கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. சென்னை அணியின் வெற்றிக்கு தனி ஒருவராக அஸ்திவாரம் அமைத்தார் ரவீந்திர ஜடேஜா. பேட்டிங், பவுலிங் மட்டும் ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் ஜடேஜா. இந்நிலையில் ஜடேஜாவை மனதார பாராட்டி புகழந்துள்ளார் விராட் கோலி. 


Advertisement

“தனி ஒரு வீரரிடம் நாங்கள் வீழ்ந்துவிட்டோம். இன்று அவரது திறமை அனைவருக்கும் தெரிந்துள்ளது. பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கில் அவரது சிறப்பான ஆட்டத்தை பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். அடுத்த இரண்டு மாதங்களில் அவர் இந்தியாவுக்காக விளையாட உள்ளார். இந்திய அணியின் பிரதான ஆல் ரவுண்டர் இப்படி ஆடுவது எனக்கு மகிழ்ச்சி. நம்பிக்கையுடன் அவர் களத்தில் சிறப்பாக ஆடுவது பல வாய்ப்புகளை உருவாக்கும்” என கோலி தெரிவித்துள்ளார். 

image


Advertisement

மேலும் இந்த தோல்வியை நேர்மறையாக அணுகி தங்களது தோல்விக்கான காரணத்தை அறிந்து, அதனை களைய உள்ளதாகவும் கோலி தெரிவித்திருந்தார். ஜடேஜா இந்த போட்டியில் 28 பந்துகளில் 62 ரன்களை விளாசி இருந்தார். அதுமட்டுமல்லாது 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் விட்டுக்கொடுத்ததோடு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார். அதோடு ஒரு ரன் அவுட்டும் செய்திருந்தார்.


Advertisement

Advertisement
[X] Close