Published : 25,Jul 2017 04:41 PM
வந்தேமாதரம் தொடர்பான நீதிபதி உத்தரவு: விடுதலை சிறுத்தைகள், தவ்ஹீத் ஜமாத் எதிர்ப்பு

பள்ளி, கல்லூரிகளிலும் நிறுவனங்களிலும் வந்தேமாதரம் பாடலை பாட வேண்டும் என்ற உத்தரவு நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரானது என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தவ்ஹித் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் முகமது யூசுப் கூறுகையில் வந்தேமாதரத்தை கட்டாயப்படுத்துவது தவறு என்றும், நீதிபதியின் உத்தரவில் குழப்பங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
தேசபக்தியை வளர்க்கும் வகையில் வந்தே மாதரம் பாடலை அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் கட்டாயம் பாட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது குறித்த வழக்கில் உத்தரவிட்டு பேசிய நீதிபதி எம்.வி.முரளிதரன், சுதந்திரப் போராட்டத்தையும், தியாகிகளையும் மக்கள் மறந்து வருவது கவலையளிப்பதாக கூறினார்.