[X] Close

“பெங்களூரு அணியில் இருப்பது எனது வீட்டில் இருப்பது போன்ற உணர்வை தருகிறது” - மேக்ஸ்வெல்

ஐபிஎல் திருவிழா

RCB-team-gives-me-a-feeling-like-being-in-home-says-All-Rounder-Glenn-Maxwell-IPL-2021

“பெங்களூரு அணியில் இருப்பது எனது வீட்டில் இருப்பது போன்ற உணர்வை தருகிறது” - மேக்ஸ்வெல் 


Advertisement

சர்வதேச கிரிக்கெட் உலகின் ‘பிக் ஷோ’ என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேக்ஸ்வெல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருப்பது தனது வீட்டில் இருப்பது போன்ற உணர்வை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த சீசனில் மும்பை மைதானத்தில் தனது முதல் போட்டியை பெங்களூரு அணி ராஜஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ளது. மேக்ஸ்வெல் இப்போத நல்ல பார்மில் உள்ளார். இந்நிலையில் அவர் பேட்டிங்கிற்கு சாதகமான மும்பை மைதானத்தில் ஆட இருப்பது அவர் ‘பாட்ஷா’வாக உருவெடுப்பார் என மீம்ஸ்கள் கூட பறந்து கொண்டிருக்கின்றன. 

“ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான எனது இந்த பயணத்தில் முதல் நாளில் இருந்தே வீட்டில் இருப்பது போன்ற உணர்வு தான் எனக்கு. வீரர்களுடன் இணக்கமாக பயணிக்கின்றனர் பயிற்சியாளர்கள். மும்பை மைதானத்தில் இதற்கு முன்னதாக அதிக அளவிலான ரன் குவிப்பில் அணிகள் ஈடுபட்டிருந்ததை கவனிக்க முடிந்தது. நிச்சயமாக எங்களது பேட்டிங் குழுவும் அதற்கு முயற்சிக்கும். அது அணிக்கும் பலமாக இருக்கும்” மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். 


Advertisement

பெங்களூரு அணி இந்த சீசனின் முதல் மூன்று போட்டிகளில் மும்பை, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளை வீழ்த்தி உள்ளது. நான்காவது போட்டியில் ராஜஸ்தானுடன் விளையாட உள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close