[X] Close

"அந்த பயமெல்லாம் இப்போ இல்ல!" - சூர்யகுமார் யாதவ்

Subscribe
Have-gone-past-the-phase-where-I-fear-failures-says-Suryakumar-Yadav

முன்பெல்லாம் தோல்வியை கண்டால் பயப்படுவேன், ஆனால் இப்போது அதெல்லாம் இல்லை என மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.


Advertisement

டெல்லிக்கு எதிரான நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணி தோல்வியடைந்தது. அதிரடி பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ்வும் பெரியளவில் சோபிக்கவில்லை. அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவால் ஐபிஎல் தொடரில் எதிர்பார்க்கும் அளவுக்கு சிறப்பாக விளையாட முடியவில்லை.

image


Advertisement

இது குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ் "நான் இப்போது எனக்கு வழங்கப்பட்டிருக்கும் வாய்ப்பை சந்தோஷமாக ஏற்று விளையாடி வருகிறேன். எனக்களிக்கப்பட்டு இருக்கும் வாய்ப்பை சாதகமாக்க முயன்று வருகிறேன். முன்பெல்லாம் சிறப்பாக விளையாடவில்லை என்றால் மனதில் ஓர் பயம் தோன்றும். ஆனால் இப்போது அந்த பயமெல்லாம் போய்விட்டது. வாழ்கையின் அந்தக் கட்டத்தை நான் கடந்து வந்துவிட்டேன்" என்றார்.

மேலும் "அடுத்து 2-3 ஆண்டுகளுக்கு எப்படி என்னுடைய ஆட்டத்திறனை மேம்படுத்துவது மட்டுமே அந்த எண்ணமாக இருக்கிறது. என்னுடைய ஒவ்வொரு போட்டியையும் நான் ரசித்தே விளையாடுகிறேன். ஆட்டமிழந்தால் எதனால் ஆட்டமிழந்தேன் என்ன தவறு செய்தேன் என்பது குறித்து ஆலோசிக்கிறேன். அதற்கேற்றார் போல வலைப் பயிற்சியில் தவறை சரி செய்ய முயற்சி மேற்கொள்கிறேன்" என்றார் சூர்யகுமார் யாதவ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close