[X] Close >

புதுச்சேரியில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு!

Puducherry-Assembly-elections-are-going-on-today-

புதுச்சேரி சட்டசபை தேர்தல் இன்று நடக்கிறது. இதில் அங்குள்ள 30 தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்குகிறது.


Advertisement

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும், என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் மற்றொரு அணியாகவும் களத்தில் உள்ளன. இதையடுத்து 2 அணிகளை சேர்ந்த தலைவர்கள், வேட்பாளர்கள், பிற கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகளும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த பிரச்சாரம் நேற்று முன்தினம் இரவு 7 மணியுடன் ஓய்ந்தது.

இந்தநிலையில், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்குகிறது. மாநிலத்தில் உள்ள புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாகே ஆகிய பிராந்தியங்களில் 30 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


Advertisement

மாநிலம் முழுவதும் 4 லட்சத்து 72 ஆயிரத்து 341 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 31 ஆயிரத்து 383 பெண் வாக்காளர்களும், இதர பிரிவினர் 116 பேரும், புலம் பெயர்ந்த இந்தியர்கள் 357 பேரும், பணி வாக்காளர்கள் 310 பேர் என மொத்தம் 10 லட்சத்து 4 ஆயிரத்து 507 வாக்காளர்கள் உள்ளனர்.

மாநிலத்தில் புதுச்சேரியில் 278, காரைக்கால் 30, மாகே 8, ஏனாமில் 14 உள்பட மொத்தம் 340 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. அங்கு கண்காணிப்பு கேமராவுடன் பாதுகாப்புக் கூடுதல் போலீசார் நிறுத்தப்படுகிறார்கள். துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பும் போடப்படுகிறது.

நேற்று காலை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாரிகளில் ஏற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டன. வாக்குச்சாவடிகளில் அவற்றை தேர்தல் அலுவலர்கள் பெற்றுக்கொண்டு தயார் நிலையில் வைத்துள்ளனர். இன்று காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெறும்.


Advertisement

இந்த நிலையில் புதுச்சேரியில் 144 தடை உத்தரவுகள் அமலில் உள்ள நிலையில் குடும்பமாகவோ, நண்பர்களுடன் சேர்ந்து சென்றோ வாக்களிக்க தடையில்லை என விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close