[X] Close >

தொடர்ந்து வெற்றிநடை! ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சாதித்த ஆஸ்திரேலிய மகளிர் அணி!

Australian-Women-s-Cricket-Team-Creates-new-Record-in-ODI-Cricket-by-winning-22-matches-Consecutively

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் புதிய  சாதனை படைத்துள்ளது. தொடர்ச்சியாக 22 போட்டிகளில் வெற்றி பெற்று அதிக வெற்றிகளை பெற்ற கிரிக்கெட் அணியாக உருவெடுத்துள்ளது. இதற்கு முன்னதாக ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய ஆண்கள் அணி 21 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதே ஒருநாள் போட்டிகளில் ஒரு அணி தொடர்ச்சியாக வெற்றியை பதிவு செய்த சாதனையாக இருந்தது. 


Advertisement

“இது ஒரு மிகப்பெரிய சாதனை. தொடர்ந்து நாங்கள் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு கிடைத்த அங்கீகாரம். அனுபவும் இளமையும் எங்களுக்கு கை கொடுத்துள்ளது. நாங்கள் கிரிக்கெட்டை ஆக்ரோஷத்துடன் விளையாடவே விரும்புகிறோம். இந்த வெற்றி நடை தொடரும்” என ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லேனிங் தெரிவித்துள்ளார். 

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெற்றியை பதிவு செய்து இந்த சாதனையை எட்டியுள்ளது ஆஸ்திரேலியா.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close