முகக்கவசத்தில் தங்கம் கடத்திய நபர், சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார். அவரிடமிருந்து ரூ2.93 லட்சம் மதிப்புடைய 65 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஃபிளை துபாய் விமானம் மூலம் துபாயில் இருந்து சென்னை வந்த புதுக்கோட்டையை சேர்ந்த முகமது அப்துல்லா (40) என்பவர் விமான நிலையத்தை விட்டு அவசரமாக வெளியேற முயன்றதையடுத்து, வெளியே செல்லும் வழியில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். விசாரணையின்போது அவர் பதற்றத்துடன் காணப்பட்டதாலும், அவரளித்த பதில்கள் தெளிவாக கேட்காததாலும், அவரது முகக் கவசத்தை கழட்டுமாறு அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவரது முகக்கவசம் வழக்கத்தை விட அதிக எடையில் இருந்ததும் கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அவரது முகக்கவசம் கத்தரித்து திறக்கப்பட்டதில், இரண்டு முகக்கவங்களை ஒன்றாக இணைத்து தைத்திருந்ததும், அவற்றின் நடுவே தங்கப் பசை வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 24 கேரட் கொண்ட ரூ.2.93 லட்சம் மதிப்புடைய 65 கிராம் தங்கம் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவரது பையை சோதனை செய்து பார்த்தபோது, ஐபோன் 12 புரோ 10, பயன்படுத்திய ஐபோன்கள் 8, பயன்படுத்திய மடிக் கணினிகள் 9, 2 பெட்டிகளில் சிகரெட்டுகள் ஆகியவை கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ 8.2 லட்சமாகும்.
மொத்தம் ரூ 11.13 லட்சம் மதிப்புடைய தங்கம், ஐபோன்கள், பயன்படுத்திய மடிக் கணினிகள் மற்றும் சிகரெட்டுகள் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன என்றும், அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.
Loading More post
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ