பீகாரின் நவாடா மாவட்டத்தில் கலப்படம் செய்யப்பட்ட போலி மதுபானம் அருந்தியதால் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிர் இழந்தனர்.
இந்த சம்பவம் பீகார் மாநிலம் நவாடாவின் கோண்டாபூர் மற்றும் கரிடி பிகா பகுதியில் நடந்துள்ளது. ஆனால், ஆறு நபர்களின் மரணம் போலி மதுபானத்தை உட்கொண்டதால் ஏற்பட்டதா என்பதை இன்னும் உள்ளூர் நிர்வாகம் உறுதிப்படுத்தவில்லை. உள்ளூர் நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் இப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
இறந்தவர்களின் உறவினர்கள், இறந்த நபர்கள் திங்களன்று ஹோலி பண்டிகையில் கலப்படம் செய்யப்பட்ட மதுபானத்தை உட்கொண்டதாகக் கூறியுள்ளனர். மது அருந்திய பின்னர் அவர்களின் நிலை மோசமடையத் தொடங்கியது. அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் ராம்தேவ் யாதவ், அஜய் யாதவ், தினேஷ், ஷைலேந்திர யாதவ், லோஹா சிங் மற்றும் கோபால் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பீகார் அரசுக்கு மாநிலத்தில் நடைமுறையில் உள்ள முழு மதுவிலக்கு குறித்து ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) கேள்வி எழுப்பியுள்ளது. " இதுவரை போலி மதுவால் நவாடாவில் 6 பேரும், பெகுசாரையில் 2 பேரும் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். மதுவுக்கு தடை இல்லாத நாட்டின் பிற பகுதிகளை விட தடை நடைமுறையில் உள்ள பீகாரில் அதிகமான மக்கள் மது காரணமாக இறந்து கொண்டிருக்கிறார்கள். பீகாரில் தடை இருந்து என்ன பயன்?" என்றார் ஆர்.ஜே.டி கேள்வி எழுப்பியது.
இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பீகார் அமைச்சர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி