[X] Close >

"பொறுத்திருந்து பாருங்கள்"... மீண்டும் அஜித் - போனி கபூர் கூட்டணி?!

Boney-Kapoor-said-that-another-collaboration-is-a-possibility-with-Ajith

அஜித்தின் 'வலிமை' படம் தொடர்பாக பல விஷயங்களை முதல்முறையாக விரிவாக பேசியிருக்கிறார், அதன் தயாரிப்பாளர் போனி கபூர்.


Advertisement

'நேர்கொண்ட பார்வை' வெற்றிக்குப் பிறகு அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி 'வலிமை' படத்தில் இணைந்துள்ளது. அஜித்துக்கு ஜோடியாக ஹியூமா குரேஷி நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் அப்டேட்டை கடந்த ஒரு வருடமாக ரசிகர்கள் கேட்டுவந்த நிலையில், தயாரிப்பாளர் போனிகபூர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், அஜித்தின் 50-வது பிறந்தநாளையொட்டி மே 1ம் தேதி 'வலிமை' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். இதனால், அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் போனி கபூர் சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேட்டியளித்தார். அதில், அஜித் தொடர்பாகவும், தென்னிந்திய சினிமா தொடர்பாகவும் பல விஷயங்களை பேசினார்.


Advertisement

அப்போது அஜித்தும் நீங்களும் மீண்டும் இணைவீர்களா என்று கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் கொடுத்த போனி கபூர், "எங்கள் இருவருக்குள் நல்ல பிணைப்பு உள்ளது. அஜித் விரும்பும் வரை எங்களுள்ளான உறவைத் தொடர விரும்புகிறேன். அஜித்தும் அவ்வாறே உணர்கிறார் என்று நான் நம்புகிறேன். பொறுத்திருந்து பாருங்கள்" என்று கூறியிருக்கிறார்.

image

இதேபோல் 'வலிமை' படம் குறித்து பேசிய போனி கபூர், "வலிமை படம் அழுத்தமான குடும்ப சென்டிமென்ட் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த படம். நான் கதையைக் கேட்டவரை, படப்பிடிப்புக்குச் சென்றும், படம்பிடித்த காட்சிகளையும் பார்த்தவரை இந்தப் படம் நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். ரசிகர்களை தாண்டி அத்தனை சினிமா ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் படமாக வந்திருக்கிறது.


Advertisement

பைக் ரேஸ் காட்சிகளில், ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் அஜித்தே நடித்துள்ளார். பான் இந்தியா படமாக இந்தப் படத்தை வட இந்தியாவிலும் வெளியிடுவோம். ஆனால், டப்பிங் செய்வோமா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை" என்றும் தெரிவித்திருக்கிறார். முன்னதாக, 'விஸ்வாசம்' படத்தை முதல் நாள் நள்ளிரவு ஷோ பார்த்த அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close