கொடியில் காயவைத்த துணியை சற்று விலக்கிய காரணத்தால் ஏற்பட்ட தகராறில் வடமாநில இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் கண்ணகி நகரைச் சேர்ந்தவர் ஆதிமூலம்(44). இவருக்கு அமுதா என்ற மனைவியும் நிதீஷ் என்ற மகனும் உள்ளனர். வாடகை வீட்டில் வசித்து வரும் இவரது வீட்டின் அருகில் மேற்குவங்கத்தை சேர்ந்த பயாஸ் அலி என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர், பயாஸ் வீட்டில் இருசக்கர வாகனத்தை நிறுத்தும்போது, அமுதா கொடியில் காயவைத்த துணியை சற்று விலக்கி விட்டு வாகனத்தை நிறுத்தியதாகத் தெரிகிறது. அப்போது அமுதா அவரை துடைப்பத்தால் அடித்து அவமானபடுத்தியதாகச் சொல்லப்படுகிறது.
அதனைத்தொடர்ந்தும் பயாஸ்க்கு, அமுதா தரப்பில் இருந்து தொடர்ந்து தொல்லைகள் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து பயாஸ் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இருதரப்பினரிடமும் விசாரணை நடத்திய சங்கர்நகர் காவல்துறையினர் அமுதாவிற்கு ஆதரவாக செயல்பட்டு நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருந்ததாகத் தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று இரவுபணி முடிந்து வீடு திரும்பிய பயாஸ் அலியிடம் ஆதிமூலம், அமுதா, நிதீஷ் ஆகியோர் தகராறில் ஈடுபட்டு, அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
இதனைத்தட்டிக்கேட்ட பயாஸ் அலியின் மனைவியையும் தலையில் அடித்துள்ளனர். இதனிடையே திடீரென கத்தியை எடுத்து வந்த நிதீஷ் பயாஸை குத்திக் கொலை செய்தார். இதில் சம்பவ இடத்திலேயே பயாஸ் உயிரிழந்தார். இதில் சோகம் என்னவென்றால், பயாஸ் அலிக்கு நேற்று இராண்டாவது திருமணநாள். பிழைப்பு தேடி வந்த இடத்தில் கணவன் கொல்லப்பட்ட நிலையில்,ஒரு வயது குழந்தையுடன் நிர்கதியாய் அழுது கொண்டிருக்கிறார் பயாசின் மனைவி.
சங்கர்நகர் காவல்துறையின் அலட்சிமே இந்த உயிரிழப்பிற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். புதிய ஆய்வாளர் மகுடீஸ்வரி பொறுப்பேற்று ஒரு மாதத்தில் இரண்டு கொலைகள் நடந்திருக்கின்றன.
இது குறித்து காவல்துறை கூறும் போது, “ பயாஸின் அக்கா கணவருக்கும் அமுதாவிற்கும் முறையற்ற உறவு இருந்தது. அதன் காரணமாக ஏற்பட்ட தகராறால் நிதீஷ் பயாஸை குத்தி கொலை செய்துள்ளார்” என்றனர்.
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி