[X] Close >

விஸ்வாசம் பட இசையமைப்பாளர் டி.இமானுக்கு தேசிய விருது: மனதிற்கு மகிழ்ச்சியளிப்பதாக பேட்டி

National-Award-for-D-Imman

2019-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி விஸ்வாசம் பட இசையமைப்பாளர் இமானுக்கு தேசிய வருது வழங்கப்பட்டுள்ளது.


Advertisement

இது குறித்து புதியதலைமுறைக்கு பேட்டியளித்த டி இமான் கூறும்போது, “ இறைவனுக்கு நன்றி. எனது குடும்பத்தினருக்கு நன்றி. விஸ்வாசம் பட இயக்குநர் மற்றும் படக்குழுவினர், நடிகர் அஜித் மற்றும் அஜித்தின் ரசிகர்கள் உள்ளிட்டோருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

image


Advertisement

“கண்ணான கண்ணே” பாடல் அப்பாவுக்கு மகளுக்குமான உறவை பிரதிபலிக்கும் பாடலாக அமைய வேண்டும் என்பதற்காக பாடலாசிரியர் தாமரையையும், பாடகர் சித் ஸ்ரீராமையும் வரவழைத்து பதிவு செய்தோம். நாங்கள் எதிர்பார்த்தது போலவே அந்த பாடல் ஒவ்வொரு குடும்பத்திலும் அங்கமாக மாறியது.

இந்தப் பாடலை பதிவு செய்து நடிகர் அஜித்திடம் கொண்டு சென்றபோது,  ஒரு நல்ல பாட்டு நம்ம படத்துல இருக்குறது ரொம்ப சந்தோஷம் என்று கூறினார். அனைவரின் மனதிற்கு பிடித்த பாடலுக்கு தேசிய விருது அங்கீகாரம் கிடைத்திருப்பது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close