இந்தியாவில் கடந்த 3 நாட்களில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் அலட்சியமே கொரோனா பரவல் அதிகரிக்க காரணம் என சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் பரவ தொடங்கிய கொரோனா, செப்டம்பர் மாதத்தில் உச்சம் தொட்டது. படிப்படியாக குறைந்த நிலையில், தற்போது மீண்டும் வைரஸ் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த 3 நாட்களில் மட்டும், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரிடம் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, பஞ்சாப், மத்திய பிரதேசம், டெல்லி, குஜராத், கர்நாடகா, ஹரியானா ஆகிய 8 மாநிலங்களில் மட்டும் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், மக்களின் அலட்சியம் காரணமாகவே கொரோனா பரவல் அதிகரித்துள்ளது என்றார். தடுப்பூசி பயன்பாட்டில் உள்ள நிலையில், கொரோனா ஒழிந்துவிட்டதாக கருதி பலரும் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதில்லை என அமைச்சர் வருத்தம் தெரிவித்தார்.
Loading More post
தெலங்கானா: மருத்துவமனையில் இடமளிக்காததால் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த கொரோனா பாதித்த பெண்
ரெம்டெசிவர் மீதான இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்படுகிறது - மத்திய அரசு
தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்: மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடியது
முக்கியச் செய்திகள்: பிரதமர் மோடி உரை முதல் இரவுநேர ஊரடங்கின் முதல் நாள் நிறைவு வரை..
MI vs DC : 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது டெல்லி!
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்