புதுச்சேரியில் மீண்டும் மோதல்: வாரிய தலைவர் பதவிக்காலத்தை நீட்டிக்க கிரண்பேடி மறுப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புதுச்சேரியில் பதவிக்காலம் முடிந்த வாரியத் தலைவர்களாக இருந்த 7 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி காலத்தை நீட்டிக்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் கருத்து வேறுபாடு இருப்பதால் குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. 


Advertisement

புதுச்சேரியில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு வெற்றி பெற்று பதவி ஏற்றது. இதனையடுத்து 7 வாரியங்களுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள், திமுகவை சேர்ந்த 2 எம்.எல்.ஏக்களை அமைச்சரவையின் பரிந்துரையின்படி தலைவர்களாக அரசு நியமித்தது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில் அவர்களது பதவிக்காலம் கடந்த 13-ஆம் தேதியோடு ஓராண்டு ஆனதால் முடிந்துவிட்டது. இவர்களின் பதவியை நீட்டிக்க பரிந்துரைத்து அதற்கு ஒப்புதல் கோரி புதுச்சேரி அரசு கிரண்பேடிக்கு கோப்பு அனுப்பியது. இது தொடர்பாக கிரண்பேடி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாமல் பரிந்துரை வந்ததால், உரிய அறிக்கைகளுடன் அனுப்ப வேண்டும் எனக்கூறி கோப்பு திருப்பி அனுப்பப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

புதுச்சேரி சட்டமன்றத்திற்கு 3 நியமன உறுப்பினர்கள் நியமித்தது தொடர்பாக கிரண்பேடிக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் வாரியத்தலைவர்கள் விவகாரத்திலும் கிரண்பேடி எதிர்ப்பு தெரிவித்துள்ளது மோதல் போக்கு அங்கு முற்றியுள்ளதை காட்டுகிறது.
 

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement