இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் அசத்தலாக ரன் குவிப்பில் ஈடுபட்ட இந்திய பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் அம்பயரின் தவறான முடிவால் ‘அவுட்’ என அறிவிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அது சர்ச்சையாகவும் வெடித்தது. இந்நிலையில் பவுண்டரி லைனுக்கு அருகே இருந்த டக்கவுட்டில் அமர்ந்திருந்த கேப்டன் கோலி அதை பார்த்ததும் எழுந்து நின்று அம்பயரை நோக்கி கையை காட்டியபடி ‘அது அவுட் இல்லை’ என தெரிவித்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
இந்தியாவும், இங்கிலாந்தும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த நான்காவது போட்டியில் இந்தியா 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் மூலம் இந்த தொடர் 2 - 2 என சமநிலையில் உள்ளது. நாளை நடைபெற உள்ள ஐந்தாவது போட்டியே தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும்.
These types of reactions are the consequences of a mentally challenged average decision-making policy of 3rd standard umpring in an enhanced technology, period.@imVkohli @surya_14kumar @BCCI pic.twitter.com/EeALeR4lGT
— Umesh Bharatpuria (@umeshbhartpuria) March 18, 2021Advertisement
இந்தியாவுக்காக சர்வதேச களத்தில் முதல்முறையாக பேட் செய்த சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில் 57 ரன்களை குவித்தார். இந்நிலையில் தான் ஆட்டத்தின் 14வது ஓவரை சாம் கரன் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை பைன் லெக் திசையில் ரேம்ப் ஆட முயல, அவர் அடித்த பந்து பீல்டர் டேவிட் மாலனின் கைகளில் தஞ்சம் அடைந்திருக்கும். இருப்பினும் பந்து தரையில் பட்டது போல இருக்கும். ஆனால் மூன்றாவது அம்பயரின் ரீபிளேயில் அது தெரிந்தது. அது தான் தற்போது சர்ச்சையாகி உள்ளது.
Loading More post
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே
ஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்!
சென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி