சாம்சங் தனது அடுத்த மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. Samsung Galaxy M12 மாடல் இன்று இந்தியாவில் அறிமுகமானது. பட்ஜெட் போனாக ரசிகர்களை கவரும் விதமாக இந்த மாடல் அறிமுகமாகியுள்ளது. இதே மாடல் போன் வியட்னாமில் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
6.50 இன்ச் டிஸ்பிளே கொண்டதாக இந்த மாடல் உள்ளது. 8 மெகா பிக்ஸல் முன்பக்க கேமரா, 48+5+2+2 என மெகாபிக்ஸல் கொண்ட 4 வகையான கேமராக்களை கொண்டுள்ளது. 6000mAh பேட்டரி கெபாசிட்டி, 720x1600 pixels ரெசொலேசன், ஆண்ட்ராய்ட் ஓஎஸ் என பட்ஜெட் போனுக்கான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது Samsung Galaxy M12. 3 வண்ணங்களில் இந்த போன் சந்தைக்கு வந்துள்ளது.
இந்த மாடலின் விலை ரேம் மற்றும் ஸ்டோரேஜுக்கு ஏற்ப மாறுகிறது. 4GB + 64GB மாடலானது ரூ.10,999க்கும், 6GB + 128GB மாடலானது ரூ.13,499க்கும் விற்பனையாகவுள்ளது. அமேசான் மற்றும் சாம்சங் தளங்களில் இந்த மாடல் விற்பனைக்கு வருகிறது.
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி