[X] Close

"அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம்"... காலில் விழுந்து வலியுறுத்தும் தேனி கிராம மக்கள்!

Subscribe

தேனி மாவட்டத்தில் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என வீடு வீடாகச் சென்று கிராம மக்கள் காலில் விழுந்து வலியுறுத்தி வருகின்றனர்.


Advertisement

உத்தமபாளையம் அருகே உள்ள அம்மாபட்டி பேரூராட்சியை சேர்ந்த கிராம மக்கள், வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கிவிட்டு, DNC மற்றும் DNT எனப்படும் சீர் மரபினர்களுக்கு மட்டும் இரட்டை சாதி சான்றிதழ் அளித்து இழிவுப்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனால் அதிமுகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என கூறியுள்ள கிராம மக்கள், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் கம்பம் தொகுதியில் போட்டியிட்டால் கடுமையாக எதிர்ப்போம் எனவும் எச்சரித்துள்ளனர்.


Advertisement

மேலும் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் காலில் விழுந்து, அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close