“சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி” - என மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் கடந்த 2010இல் வெளியான பையா படத்தின் டூயட் பாடலுக்காக எழுதிய வரிகள் இப்போது இந்திய மொபைல் இணையதள வேகத்துடன் ஒத்துப் போகிறது. அண்மையில் உலகம் முழுவதுமுள்ள நாடுகளின் இணையதள வேகத்தை கணக்கிட்டு சொல்லும் ஸ்பீட் டெஸ்டின் (Ookla) Global Index-இல் இந்தியாவுக்கு 131வது இடம் கிடைத்துள்ளது. மாதந்தோறும் இந்த இண்டக்ஸை ஸ்பீட் டெஸ்ட் வெளியிடும். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாத்திற்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இரண்டு இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளது இந்தியா. அண்மையில் தான் இந்தியாவில் 5ஜி இணைய சேவை பரிசோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் இணையத்தின் டவுன்லோட் வேகம் நொடிக்கு 12.41 மெகா பிட்ஸாகவும், அப்லோட் வேகம் நொடிக்கு 4.76 மெகா பிட்ஸாகவும் உள்ளது.
சுமார் 140 நாடுகளின் இணைய வேகத்தின் சேவையை Ookla கணக்கிட்டுள்ளது. இந்தியா அதில் கடைசி பத்து இடங்களை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் அமீரகம், தென் கொரியா மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடத்தை பிடித்துள்ளன.
Loading More post
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 41 கைதிகளுக்கு கொரோனா!
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
பெங்களூரூ: எரியூட்ட சடலத்துடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆம்புலன்ஸ்கள்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ