விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளார்.
‘கோலமாவு கோகிலா’,‘டாக்டர்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ‘நெல்சன் திலீப்குமார்’ இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். இதற்கான முதற்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. நாயகிக்கான தேர்வில் மாளவிகா மோகனன், ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் 'விஜய் 65' படத்தின் சண்டை இயக்குநராக அன்பறிவு பணியாற்ற உள்ளார். இந்நிலையில் ”விண்ணைத்தாண்டி வருவாயா, எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம், ராதே ஷியாம் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா விஜய் 65 படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Excited to start yet another journey with this wonderful human being loved by the entrie state and very soon by the entire nation !.... looking forward to work from where we left #nanban kindleing the memory lane #thlapathy65 going to be an pan india affair ! Get ready folks ... pic.twitter.com/QLoDNPovio — manoj paramahamsa (@manojdft) February 25, 2021
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ கூடிய விரைவில் நாடே விரும்பும் உள்ள ஒரு நல்ல மனிதருடன் மற்றொரு பயணத்தை தொடங்க இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. விட்டுச்சென்ற (நண்பன் திரைப்படம்) இடத்திலிருந்து பணியை தொடங்க ஆவலாக இருக்கிறேன்; #Thalapathy65 இந்தியாவை அசர வைக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி!
தலைநகரை தவிக்கவைக்கும் கொரோனா: விழிபிதுங்கும் டெல்லி மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள்
கர்நாடகா: மடத்தில் 30 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று
வேலூர் மருத்துவமனையில் 7 பேர் உயிரிழந்த விவகாரம் - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
ஏழைநாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை, பணக்கார நாடுகளிடம் அதிக தடுப்பூசி: கிரெட்டா தன்பெர்க்
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்