இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டி இன்று பிற்பகலில் தொடங்குகிறது.
அகமதாபாத்தில் உள்ள பிரமாண்ட சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில், இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு பகலிரவு ஆட்டமாக போட்டி தொடங்குகிறது. 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இங்கிலாந்து கடைசி இரு டெஸ்ட் போட்டிகளுக்காக ஆடும் லெவனில் சில முக்கிய மாற்றங்களைச் செய்யவுள்ளதாக தெரிகிறது.
பேர்ஸ்ட்டோவ், ஸேக் கிராவ்லி, கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். இந்திய அணியில் ஷாபாஷ் நதீமிற்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியாளர் யார் என்பதை தீர்மானிக்கவுள்ள போட்டிகள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பும் உள்ளது. மேலும் கடைசி இரு டெஸ்ட் போட்டிகளும் முற்றிலும் புதிய அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளதால், இரு அணிகளுக்கும் சவால்கள் நிறைந்திருக்கும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
63 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் 4 நுழைவு வாயில்கள் உள்ளன. பிரதான மைதானத்தில் மட்டுமே 11 ஆடுகளங்கள் உள்ளன. 8 செ.மீ. வரை மழை பெய்தாலும் போட்டி ரத்தாகாத வகையில், உடனடியாக நீரை உறிஞ்சி வெளியேற்றும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மைதானத்தில் நிழல் விழாத அளவுக்கு பிரத்யேக எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அருகிலேயே உள்ளரங்கு கிரிக்கெட் பயிற்சி அகாடமி, பிரம்மாண்ட உணவகம், மினி 3டி திரையரங்கம், நீச்சல்குளம், பயிற்சிக்கென 2 மைதானங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 6 உள்ளரங்க ஆடுகளங்களும், அவற்றில் பவுலிங் மெஷின்களும் அமைக்கப்பட்டுள்ளன. விருந்தினர்கள் தங்குவதற்காக 50 டீலக்ஸ் அறைகளுடன் க்ளப் ஹவுசும் வளாகத்தில் உள்ளது.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?