பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்து திமுகவினர் இன்று மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முரட்டுத்தனமான இந்த விலை உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் மிரட்டிக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசு 20 லட்சம் கோடி ரூபாய்க்கு விதித்த கலால் வரியும் அதிமுக அரசு விதித்த அதிகளவிலான வாட் வரியும்தான் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர காரணம் என்றும் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பெட்ரோல், டீசல் கலால் வரி விதிப்பில் மத்திய அரசுக்கு கிடைத்த ஒரு லட்சம் கோடி ரூபாய் எங்கு சென்றது புரியாத புதிராக இருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒரு லிட்டர் பெட்ரோல் போடும்போது சாலை மேம்பாட்டு வரியாக மக்கள் 18 ரூபாயை தரும் நிலையில் தனியாக சுங்கக் கட்டணம் வசூலிப்பது ஏன் எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை குறைக்க வலியுறுத்தி இன்று மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Loading More post
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
திருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி!
வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்!
சூடுபிடிக்கும் தமிழக அரசியல்களம்: சென்னையில் அமித் ஷா!
19 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-51..!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி