இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் "நானே வருவேன்" திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜனவரி 13 ஆம் தேதி வெளியானது. செல்வராகவன் - தனுஷ் சகோதரர்கள் இருவரும் "மயக்கம் என்ன" படத்திற்கு அடுத்து சுமார் பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் இணைந்துள்ளனர். தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவான ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிபெற்றன. இதையடுத்து இவர்கள் கூட்டணி படத்துக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது.
ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் ஒரு கதாநாயகியாக நடிகை தமன்னா நடிக்கவுள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஒரு பாடலை யுவன் ஷங்கர் ராஜா கம்போஸ் செய்து முடித்திருக்கிறார்.
இந்தப் படத்தை அடுத்து செல்வராகவன் - தனுஷ் கூட்டணி ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர். இந்நிலையில் ரசிகர்களால் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
மார்ச் 2 முதல் வேட்பாளர் நேர்காணல் - திமுக தலைமை அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'