[X] Close >

தனுஷ் எவ்வளவு உயரம் போனாலும் செட்ல நாங்க ப்ரதர்ஸ்தான் - செல்வ ராகவன்

No-matter-how-tall-Dhanush-goes-we-are-both-brothers-on-the-set-selvaragavan

இயக்குநரான செல்வராகவன் முதல்முறையாக ‘சாணி காயிதம்’ படத்தில் நடித்திருக்கும் நிலையில் அவரின் மினி பேட்டி


Advertisement

சாணி காயிதம் படத்தில் நீங்கள் நடிக்கக் காரணம் என்ன?

‘சாணி காயிதம்’ படத்தின் கதை மிக நன்றாக இருந்தது. முதலில் சந்தேகம் இருந்தது. ஆனால் அந்தப்படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் என்னை சமாதானம் செய்து நடிக்க வைத்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. அப்போது எனக்கு நானே சொல்லிக்கொண்டது “ கேமரா எங்க இருக்குனு பாக்காதா” என்பதுதான்.


Advertisement

கேமராவிற்கு பின்னர் நான் பலமுறை நடித்திருக்கிறேன். ஆனால் கேமராவின் முன்னர் நடிப்பது வேறு விதமான அனுபவத்தை தந்துள்ளது.

image

கீர்த்தி சுரேஷ் உடன் பணியாற்றியது பற்றி?


Advertisement

எனக்கு அவருடன் இன்னும் பெரிதாக பரிட்சியமாகவில்லை. அவர் நடித்த ‘மகாநதி’ படம் பார்த்தேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 

இனி படங்களில் தொடர்ந்து நடிப்பீர்களா?

என்னிடம் நேரம் இருக்கும் பட்சத்தில் படங்களில் நடிப்பேன். ஹாலிவுட்டில் பிரபல இயக்குநர் குயிண்டன் டாரண்டினோ திரையிலும் தனது திறமையை வெளிப்படுத்துகிறார். ஆனால் நான் நடிப்பை கேரியராக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. அதை ஒரு பகுதியாகவே பார்க்கிறேன். 

தனுஷ் ஹாலிவுட் படங்களில் நடிக்கிறார், அவரது வளர்ச்சியை எப்படி பார்க்கீறீர்கள்?

தனுஷ், படப்பிடிப்புக்கு செல்லும் முன்னர்,  கதாபாத்திரத்தின் தயாரிப்புக்கு அதிகளவு மெனக்கெடுவார். எப்படி நிற்கவேண்டும், தலையை எப்படி வைக்க வேண்டும், கதாப்பாத்திரத்தின் கை அசைவு உள்ளிட்ட பலவற்றை படிப்படியாக செய்து பார்ப்பார். இது அவருக்கு பெரிய பயணம். தனுஷை பற்றி பேசும்போது அவர் தேசிய விருது வென்றுள்ளார், தற்போது ஹாலிவுட்டுக்கும் சென்று விட்டார். ஆனால் நாங்கள் இணைந்து பணியாற்றும் போது சகோதரர்களாகத்தான் பணியாற்றுவோம்.

image

செட்டில் அவர் என்னை சார் என்று அழைப்பார். நான் அவரை தனுஷ் என்று அழைப்பேன். ஆனால் கேரவனுக்குள் ஒருவரையொருவர் ‘டேய்’ என்றுதான் அழைத்துக்கொள்வோம்.


ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில், கடந்த பாகத்தில் நடித்தவர்கள் இருப்பார்களா?

image

 நாங்கள் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் பற்றி பேசியதற்கு  ரசிகர்களே காரணம். அவர்கள் அந்தப்படம் குறித்து தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். தற்போது தனுஷ் மட்டும் இரண்டாம் பாகத்தில் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. சக நடிகர்களும் ஒத்துழைக்கும் பட்சத்தில் இந்தப்படத்தை விரைவில் எடுத்து முடித்து விடலாம்.

இரண்டாம் உலகம் படம் குறித்து?

ஒரு இயக்குநரரால் நம்பிக்கை இல்லாமல் ஒரு படத்தை தொடங்கவோ அல்லது முடிக்கவோ இயலாது. உங்களுக்கு படத்தின் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். அது மட்டுமன்றி நீங்கள் தொடர்ந்து செல்ல வேண்டும்.

அது சில சம்யங்களில் வெற்றியடையும் சில சமயங்களில் தோல்வியை தழுவும். ஆனால் நீங்கள் தொடர்ந்து செல்ல வேண்டியது மிக முக்கியமாகும். ஒரு இயக்குநர் எதை செய்தாலும் அதில் அவருக்கு அபார நம்பிக்கை இருக்க வேண்டும்.” என்றார்

தகவல் உதவி: டைம்ஸ் ஆப் இந்தியா 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close