கோவையில், தடுப்பூசி போட்டதால் இரு குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படும் புகார் தொடர்பாக, கமிட்டி அமைத்து விசாரணை நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை மசக்காளிபாளையம் அருகே வசிக்கும் பிரசாத்- விஜயலட்சுமி தம்பதியின் 2 ஆவது குழந்தையான, மூன்று மாத ஆண்குழந்தைக்கு அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சுகாதாரத்துறையால் நடத்தப்பட்ட முகாமில் தடுப்பூசி போடப்பட்டது. பென்டாவேலன்ட், ரோடோவைரஸ் தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்து குழந்தைக்கு போடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து வீட்டிற்கு சென்ற குழந்தை மயங்கியுள்ளது.
அதனைத்தொடர்ந்து குழந்தை கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டது. அதனைத்தொடர்ந்து தடுப்பூசி போட்டதால் குழந்தை இறந்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், உடற்கூராய்வில், நிமோனியா காய்ச்சல் காரணமாக குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது.அதேபோல சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்த வெற்றிமாறன் என்ற இரண்டரை வயது குழந்தைக்கு மசக்காளிபாளையம் துணை சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், அந்தக் குழந்தையும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தது.
இது குறித்து பேசிய சுகாதாரத்துறை செயலர், “ இந்த விவகாரம் குறித்து, தனி மருத்துவர்கள் குழு விசாரித்து வருகிறது. அவர்களது ஆய்வுக்குப் பின்னரே காரணம் தெரிய வரும்” என்றார்.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி