சென்னையில் மனைவி இறந்த துக்கம் தாங்கமல் மனவேதனையில் மின் கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள மின் கம்பத்தில் வாலிபர் ஒருவர் திடீரென ஏறி தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டி வந்தார். இந்த தகவல் கோயம்பேடு பேருந்து நிறுத்த போலீசாருக்கு கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கீழே இறங்க மறுத்ததால் கோயம்பேடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உடனடியாக அங்கு வந்த கோயம்பேடு தீயணைப்பு வீரர்கள் ராட்சத கிரேன் மூலமாக மின் கம்பத்தில் ஏறினர். தற்கொலை மிரட்டல் விடுத்த நபரிடம் பேச்சு வார்த்தை நடத்தி சாதுர்யமாக மீட்டு கீழே இறக்கினர்.
மதுபோதையில் இருந்த அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர் பெயர் ஆபிரஹாம் (43) என்றும். அவர் செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் மனவேதனையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Loading More post
சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு.. இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
60 வயதை கடந்த 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
கள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்குத் தண்டனை... பஞ்சாப் அரசு முடிவு
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?