சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட கேதர் ஜாதவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
2021-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் அணிகளுக்கு வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான மினி ஏலம் இன்று சென்னையில் நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் கடந்தாண்டு மோசமாக விளையாடியதால் அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட கேதர் ஜாதவ், இந்த ஏலத்தில் பங்கேற்றார்.
முதல் சுற்றில் கேதர் ஜாதவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன் வரவில்லை. இருப்பினும், இரண்டாவது ரவுண்டில் கேதர் ஜாதவை அடிப்படை விலையான 2 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. அதேபோல், சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஹர்பஜன் சிங்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இறுதிக்கட்ட ஏலத்தில் அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு அவரை வாங்கியுள்ளது.
கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக 8 போட்டிகளில் விளையாடிய கேதர் ஜாதவ் 62 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதற்கு முன்பு 2019 ஐபிஎல் சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 162 ரன்களே எடுத்தார்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி