புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த பலத்த மழை மற்றும் நெல் அறுவடை இயந்திர தட்டுப்பாட்டால் பல ஆண்டுகளுக்குப் பின்பு விவசாயிகள் மீண்டும் சாலையோரங்களில் கையினால் கதிரடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்ததாலும் மேட்டூர் அணை குறித்த நேரத்தில் திறக்கப்பட்டதாலும் இதுவரையில் இல்லாத வகையில் சுமார் 2.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர். தேவையான தண்ணீர் இருந்ததால் இந்த ஆண்டு நல்ல விளைச்சல் இருந்த நிலையில் அறுவடை காலகட்டத்தில் பருவம் தவறி பெய்த பலத்த மழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த ஒரு லட்சம் ஏக்கருக்கு மேலான நெற்பயிர்கள் மழையில் நனைந்து நாசமாகின.
மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வருவாய்த்துறையினர், வேளாண்மைத் துறையினர், மற்றும் மத்திய குழுவினர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதிப்படைந்த பயிர்களை பாதிப்பு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என வாக்குறுதி அளித்துள்ளனர். இந்நிலையில் தற்போது மழை ஓய்ந்து வெயில் அடிக்க தொடங்கியுள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி, மேற்பனைக்காடு, வல்லத்திராகோட்டை, அன்னவாசல், இலுப்பூர், கந்தர்வகோட்டை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் அறுவடை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மழையின் காரணமாக பெரும்பாலான வயல்களில் பயிர்கள் படுத்து விட்டதால் நெல் அறுவடை செய்வதில் விவசாயிகளுக்கு பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் விவசாயிகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு கையால் அறுவடை செய்து சாலையோரங்களில் வைத்து கதிர் அடித்து வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட விவசாயிகள் கூறுகையில், "பருவம் தவறி பெய்த பலத்த மழையால் பெரும்பாலான வயல்களில் கதிர்கள் சாய்ந்து படுத்து விட்டna. இதனால் விவசாயிகள் வாங்கிய கடனைக் கூட கட்ட முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டு உள்ளnar. மழை பாதிப்பிற்கு பின்னர் மகசூலும் குறைந்து உள்ளதால் விவசாயிகள் என்ன செய்வது என்று தவித்து வருகின்றனர். அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” எனவும் கூறியுள்ளனர்.
மேலும், “அறுவடை இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்தால் கூடுதல் நேரம் ஆவதால் ஒரு ஏக்கருக்கு 9 ஆயிரம் ரூபாய் வரை செலவாகின்றது. அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாட்டால் கையால் அறுவடை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பல்வேறு வயல்களில் ஈரப்பதம் அதிகமாக உள்ளதால் நெல் அறுவடை இயந்திரம் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தற்போது கையால் அறுவடை செய்து மற்றும் சாலைகளின் ஓரங்களில் வைத்து கதிர் அடித்து வருகின்றோம். அரசும் வேளாண்மை துறை யினரும் உரிய நடவடிக்கை எடுத்து அறுவடை இயந்திரங்களை தேவையான பகுதிகளுக்கு அனுப்பி வைத்தால் குறைந்த வாடகையில் விவசாயிகள் பயன் பெறுவார்கள்” என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
நிரவ் மோடியை இந்தியா அழைத்துவர இங்கிலாந்து உள்துறை அமைச்சர் அனுமதி
தீபக் சாஹர் அசத்தல் பவுலிங்! சென்னையின் வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு?
"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்