பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான அமிதாப் பச்சன், அக்ஷய் குமார் ஆகியோர் திடீர் எதிர்ப்பை சந்தித்து இருக்கிறார்கள்.
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் விவாதப்பொருளாகி இருக்கிறது. அதுவும் மகாராஷ்டிராவில் கருத்துச் சண்டை மூளும் அளவுக்கு சென்றிருக்கிறது. முந்தைய மன்மோகன் சிங் அரசு பெட்ரோல் விலையை ஏற்றியபோது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், விலை ஏற்றத்தை கண்டித்து ட்வீட் பதிவிட்டார். ஆனால், இன்று பெட்ரோல் விலை செஞ்சுரி அடித்த நிலையில், எந்த பிரபலமும் அதைப் பற்றி வாய் திறக்கவில்லை. இதனை முன்வைத்து மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சி, அமிதாப் பச்சன் மற்றும் அக்ஷய் குமாருக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
T 753 -Petrol up Rs 7.5 : Pump attendent - 'Kitne ka daloon ?' ! Mumbaikar - '2-4 rupye ka car ke upar spray kar de bhai, jalana hai !!'
அமிதாப் பச்சன் மற்றும் அக்ஷய் குமார் போன்ற நட்சத்திரங்கள் சம்பந்தப்பட்ட திரைப்படங்களின் படப்பிடிப்பை நிறுத்துவதாக மிரட்டும் அளவிற்கு மகாராஷ்டிரா காங்கிரஸின் மாநில கட்சித் தலைவர் சென்றுள்ளார்.
``எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவது பொது மக்களைத் தாக்கியுள்ளது. மன்மோகன் சிங் அரசாங்கத்தின்போது அமிதாப் பச்சன் மற்றும் அக்ஷய் குமார் போன்றவர்கள் எரிபொருள் விலை உயர்வு பற்றி ட்வீட் செய்தார்கள். இன்று அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். சர்வாதிகார மோடி அரசாங்கத்திற்கு எதிராக பேசுவதற்கு அவர்களுக்கு தைரியம் இல்லையா?" என்று மாநில காங்கிரஸ் தலைவர் நானா படேல் கேள்வி எழுப்பினார்.
அதோடு நிற்காமல், ``மகாராஷ்டிராவில் அமிதாப் பச்சன் அல்லது அக்ஷய் குமார் சம்பந்தப்பட்ட படங்களின் படப்பிடிப்பை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஒன்று, நீங்கள் நரேந்திர மோடி அரசாங்கத்தின் தேசிய விரோத கொள்கைகளுக்கு எதிராக பேசுகிறீர்கள் அல்லது உங்கள் திரைப்படங்களின் படப்பிடிப்பை நாங்கள் நிறுத்துவோம்" என்று மிரட்டல் விடுத்திருக்கிறார். இது மகாராஷ்டிராவில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரத்தில், அமிதாப் பச்சன் மற்றும் அக்ஷய் குமாருக்கு ஆதரவாக தற்போது பாஜக களமிறங்கியுள்ளது. ``காங்கிரஸ் மிகவும் திறமையான ஆளுமைகளை அச்சுறுத்துகிறது. இந்தியாவுக்கு ஆதரவாக ட்வீட் செய்வது குற்றமா? வெளிநாட்டில் அமர்ந்திருக்கும் சிலர் இந்தியாவின் உருவத்தை களங்கப்படுத்துகிறார்கள், காங்கிரஸ் அவர்களுக்கு ஆதரவளிக்கிறது" என்று மகாராஷ்ட்ரா மாநில பாஜக தலைவர் ராம் கதம் கூறியதோடு, நடிகர்களுக்கு தேவையான பாதுகாப்பை தருவதாக அறிவித்திருக்கிறார்.
Loading More post
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
தமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
திருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி