தொழில்நுட்ப நிறுவனங்கள் செய்திகளை வெளியிட பணம் செலுத்த கட்டாயப்படுத்தும் ஒரு சட்டத்தை ஆஸ்திரேலியா முன்மொழிந்ததை அடுத்து, அந்நாட்டு பயனர்கள் செய்திகளைப் பகிர பேஸ்புக் தடை விதித்திருக்கிறது
பேஸ்புக் நிறுவனம் அதன் ஆஸ்திரேலிய பயனர்களுக்கான முக்கியமான ஒரு செயல்பாட்டை நீக்குகிறது. பேஸ்புக் சமூக ஊடக தளத்தில் செய்தி உள்ளடக்கத்தைப் பார்க்க, பகிர, மற்றும் தொடர்பு கொள்ள தற்போது தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் முன்மொழியப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் செய்திகளை வெளிப்படுத்த பணம் செலுத்த கட்டாயப்படுத்தும் சட்டத்திற்கு பதிலளிக்கும் வகையில், பேஸ்புக் இத்தகைய முடிவை எடுத்திருக்கிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பேஸ்புக் நிறுவனம் "முன்மொழியப்பட்ட சட்டம் எங்கள் தளத்திற்கும், செய்தி உள்ளடக்கத்தைப் பகிர அதைப் பயன்படுத்தும் வெளியீட்டாளர்களுக்கும் இடையிலான உறவை அடிப்படையில் தவறாகப் புரிந்துகொள்கிறது. இச்சட்டம் மூலமாக நாங்கள் இரண்டு முடிவை எடுக்கலாம், ஒன்று இந்த சட்டத்திற்கு இணங்க வேண்டும் அல்லது ஆஸ்திரேலியாவில் எங்கள் தளத்தில் செய்தி உள்ளடக்கத்தை அனுமதிப்பதை நிறுத்தவேண்டும். கனமான இதயத்துடன், நாங்கள் இந்த முடிவை தேர்வு செய்கிறோம்." என தெரிவித்தது.
ஆஸ்திரேலியாவில் முன்மொழியப்பட்ட மீடியா பேரம் பேசும் சட்டத்தின்படி பேஸ்புக் மற்றும் கூகிள் போன்ற நிறுவனங்கள் ஊடக நிறுவனங்களுக்கு தங்கள் தளங்களில் பரப்பப்படும் செய்தி உள்ளடக்கத்திற்கு பணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆஸ்திரியாவின் பொருளாளர் ஜோஷ் ஃப்ரைடென்பெர்க் பேசுகையில், இந்த மசோதாவின்படி ஆஸ்திரேலிய ஊடகங்களின் செய்தி உள்ளடக்கத்தை பயன்படுத்தும் முக்கிய தொழில்நுட்ப தளங்கள் "ஒரு நியாயமான தொகையை" செய்தி நிறுவனங்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டது என்று கூறினார். செய்தி உள்ளடக்கத்திற்கான நிதி ஊதியத்தை வழங்குவதைத் தாண்டி, தளங்களின் நெருக்கமாக பாதுகாக்கப்பட்ட வழிமுறைகளில் வெளிப்படைத்தன்மையையும் மசோதா முன்மொழிகிறது என்று கூறினார்.
Loading More post
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
மநீம - சமக - ஐஜேகே கூட்டணி? கமலுடன் சரத்குமார் சந்திப்பு!
பெட்ரோல் டீசலுக்கு லோன் தாங்க.. வங்கியில் மனு கொடுத்த இளைஞர்கள்!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'