உத்தரபிரதேச மாநிலத்தில் சுவற்றில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த நபரை கால்நடைகளை திருடவந்ததாக கருதி அப்பகுதி மக்கள் அடித்துக் கொலைசெய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்தவர் ரேஹான்(31). பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் தனது நண்பர் ஷாருக்குடன் சென்றபோது ஒரு வீட்டின் சுவரில் சிறுநீர் கழித்துள்ளனர். அதனை பார்த்த அந்த வீட்டின் உரிமையாளரான ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி நந்தன் சிங் என்பவர் அக்கம்பக்கத்தினரை அழைத்து அவர்கள் கால்நடைகளை திருடவந்ததாகக் கூறியிருக்கிறார். இதனால் அந்த ஊர்க்காரர்கள் ஒன்றுசேர்ந்து இருவரையும் பலமாக அடித்துத் தாக்கியதுடன் போலீஸாருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீஸார் இருவரையும் மீட்டு பரேலி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மேற்சிகிச்சைக்காக ரேஹானை டெல்லி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுமாறு மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே ரேஹான் உயிரிழந்துவிட்டதாக டெல்லி மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். பிரேதப் பரிசோதனையில் ரேஹானின் தலையில் பலமாக தாக்கியதால் உட்காயம் ஏற்பட்டு அவர் இறந்ததாக தெரியவந்தது.
இதனால் கோபமடைந்த ரேஹானின் மனைவி சேபா, தனது கணவரின் இறப்புக்கு காரணமான நந்தன் சிங் மீதும், ஊர்க்காரர்கள்மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் புகார் கொடுத்திருக்கிறார்.
ரேஹான் மற்றும் ஷாருக் இருவரும் திருடவந்ததாக கருதி அவர்களை பலமாகத் தாக்கியதாக காவல் அதிகாரி சங்கல்ப் ஷர்மா டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு கொடுத்த தகவலில் தெரிவித்திருக்கிறார். மேலும் இருவரையும் தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது என்றும், ஷாருக் கண்விழித்த பிறகே யார்யார் இந்த குற்றத்தில் ஈடுபட்டார்கள் என்பது தெரியவரும் என்றும் அவர் தெரிவித்தார்.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி