முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டின் பின்னணியில் மிகப்பெரிய சதி இருக்குமோ என்பது குறித்த விசாரணை வழக்கை முடித்து வைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
கோகோய் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பகிரங்கப்படுத்தப்பட்டதன் பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டம் இருப்பதாக சொல்லி, கடந்த 2019இல் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க உத்தரவிட்டது. இந்நிலையில் அதை தற்போது முடித்து வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.
நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் “வழக்கு தொடர்பான மின்னணு ஆவணங்களை மீட்பதில் சாத்தியக் குறைவு உள்ளதால் வழக்கை முடித்து வைக்கிறோம்” எனத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்துள்ளார்.
முன்னாள் நீதிபதி பட்நாயக் குழுவினால் வாட்ஸ்அப் செய்திகள் போன்ற மின்னணு ஆவணங்களை மீட்க முடியாததால் இந்த விசாரணை முடித்து வைப்பதாக தெரிவித்துள்ளது.
கடந்த 2014-இல் உச்ச நீதிமன்றத்தில் வேலைக்காக சேர்ந்த பெண் ஒருவர் 2018-இல் நீதிபதி கோகாய் வீட்டில் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தபோது தன்னை பாலியல் ரீதியாக சீண்ட முயற்சித்ததாகவும், அதற்கு தான் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் அந்த பெண் கோகாய் மீது குற்றம்சாட்டியிருந்தார். இது நீதிபதி கோகாய் மீது திணிக்கப்பட்ட மிகப்பெரிய சதித்திட்டம் என வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி