புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் மாற்றம் காலதாமதமான நடவடிக்கை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அவர்கள் மாற்றப்பட்டிருப்பது மிகுந்த காலதாமதமான அறிவிப்பு. அரசியல் சட்டத்தையும் - ஜனநாயகத்தையும் சீர்குலைத்து, கேலிப் பொருள்களாக்கிய, அதிகார மோகம் கொண்ட ஒரு துணை நிலை ஆளுநரை இவ்வளவு நாள் பதவியில் வைத்திருந்ததே மிகப்பெரிய தவறு.
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைச் செயல்பட விடாமல் தடுத்து ஒவ்வொரு நாளும் நெருக்கடியை உருவாக்கி, அம்மாநில மக்களுக்கான நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த விடாமல் முடக்கி வைத்தவர் துணை நிலை ஆளுநர்.
மக்களின் விருப்பத்திற்கு மாறாக, போட்டி முதலமைச்சராகச் செயல்பட அனுமதித்து, புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சியை ஒட்டுமொத்தமாக முடக்கி முறித்துப் போட்ட பா.ஜ.க. அரசு, தேர்தலுக்கு மூன்று மாதங்கள் இருக்கின்ற நேரத்தில் மாற்றியிருப்பது கண்துடைப்பு கபட நாடகம்.
புதுச்சேரி மக்களை ஏமாற்றக் கடைசி நேர நடவடிக்கை - இறுதிக் கட்ட முயற்சி! துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை வைத்து பா.ஜ.க. செய்த தரம் தாழ்ந்த அரசியலையும் அம்மாநிலத்தின் முன்னேற்றத்தைப் பாழ்படுத்திய மிக மோசமான செயலையும் புதுச்சேரி மக்கள் ஒரு போதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்!” எனத் தெரிவித்துள்ளார்.
Loading More post
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
மநீம - சமக - ஐஜேகே கூட்டணி? கமலுடன் சரத்குமார் சந்திப்பு!
பெட்ரோல் டீசலுக்கு லோன் தாங்க.. வங்கியில் மனு கொடுத்த இளைஞர்கள்!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'