[X] Close >

முதல்வருடன் தனியாக ஆலோசித்த பிரதமர் மோடி: கூட்டணி குறித்து பேசியதாக தகவல்!

Prime-Minister-Modi-alone-consulted-with-the-Chief-Minister

சென்னை நேரு விளையாட்டரங்கில் தனியாக முதல்வர் பழனிசாமியுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.


Advertisement

சென்னை வந்த பிரதமர் மோடி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நேரு விளையாட்டரங்கில் இருந்து ரூ. 8,126 கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து உரையாற்றினார். அவரது உரையை அகில இந்திய வானொலியின் சுதர்சன் தமிழில் மொழிப்பெயர்த்தார்.

இதையடுத்து நிகழ்ச்சி முடிந்ததும் சிறிது நேரம் பிரதமருக்கான அறையில் முதல்வர் பழனிசாமியுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை பற்றி மோடி ஆலோசித்திருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் - பிரதமர் இடையே நடந்த ஆலோசனையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.


Advertisement

தொடர்ந்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “நன்றி சென்னை, சிறப்பான வரவேற்பால் அகமகிழ்ந்தேன்” என தமிழில் பதிவிட்டுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close