மக்களவையில் பேசிய அமித் ஷா, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதாவில், யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கப்படாது என எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்தார்.
இன்று மக்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா “ஜம்மு காஷ்மீரின் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டு 17 மாதங்களே ஆகின்றன, அங்கு நடந்த வளர்ச்சி திட்டங்கள் எல்லாவற்றிற்கும் கணக்குக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால் 70 ஆண்டுகால ஆட்சியில் காங்கிரஸ் ஜம்மு காஷ்மீருக்கு என்ன செய்தார்கள் என்று கணக்கு வைத்திருக்கிறார்களா” என கேள்வி எழுப்பினார்.
மேலும், “ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா 2021ன்படி, ஜம்மு&காஷ்மீர் மாநில அந்தஸ்தைப் பெறாது என்று எங்கும் எழுதப்படவில்லை, நீங்கள் எங்கிருந்து இந்த முடிவுக்கு வருகிறீர்கள்? ஜம்மு-காஷ்மீருக்கு பொருத்தமான நேரத்தில் மாநில உரிமை வழங்கப்படும்” என தெரிவித்தார்
ஆகஸ்ட் 5, 2019 அன்று, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களான ஜம்மு& காஷ்மீர் மற்றும் லடாக் எனப் பிரிக்கப்பட்டது மற்றும் இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவின் கீழ் அதன் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, இதனால் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தனர்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!