புகழ்பெற்ற அருள்மிகு திண்டுக்கல் ஸ்ரீ கோட்டை மாரியம்மன் திருக்கோவில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பூச்சொரிதல் ரத விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் ஸ்ரீ கோட்டை மாரியம்மன் திருக்கோவில் மாசிப் பெருந்திருவிழா நேற்று பூத்த மலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. விழாவின் இரண்டாவது நாளான இன்று பூச்சொரிதல் ரத ஊர்வலம் நகரின் நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்தது.
பூ அலங்கார திருத்தேரில் முருகன், விநாயகர், சரஸ்வதி, லட்சுமி, கிருஷ்ணன், ஐயப்பன் மற்றும் விஸ்வரூப சிவலிங்கம் ஆகிய தெய்வங்களுடன், அன்னை ஸ்ரீ கோட்டை மாரியம்மன் நகரின் நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்தது.
இந்த ஆண்டு அம்மன் அலங்கார ரதத்துடன் 7 மலைகளுக்கு நடுவே காட்சி தரும் ஏழுமலையானின் திருவுருவ ரதமும் இடம்பெற்றது. கோலாட்டம் காவடியாட்டம் மேளதாளங்கள் முழங்க நகரின் நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்த அம்மனை ஆங்காங்கே காத்திருந்த பக்தர்கள் வரவேற்று பூத்தூவி வழிபட்டனர்.
Loading More post
“மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இல்லை!” - தேர்தல் ஆணையம்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை