பேரவைக்குள் குட்கா எடுத்துச்சென்ற விவகாரத்தில் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீஸை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடந்த 2017ஆம் ஆண்டு திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்குள் கொண்டு சென்றனர். இது பேரவையின் உரிமையை மீறிய செயல் என சபாநாயகர் பரிந்துரைத்ததன் அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 23 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவை உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நோட்டீஸில் அடிப்படை தவறுகள் இருப்பதாகக் கூறி அதனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தவறுகளை களைந்து புதிய நோட்டீஸ் அனுப்பலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு எதிராக ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம் எல் ஏக்களும், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கு. க. செல்வமும் புதிதாக வழக்குகளை தொடர்ந்தனர்.
அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தார். இடைக்கால தடையை நீக்கக்கோரி சட்டப்பேரவைச் செயலாளர் மற்றும் பேரவை உரிமைக் குழுவில் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து விசாரணையும் முடிவடைந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
Loading More post
கெஜ்ரிவால் 'நேரலை' சர்ச்சை: பிரதமர் கண்டிப்பு; வருத்தம் தெரிவித்த டெல்லி முதல்வர் அலுவலகம்
தமிழகத்தில் 13,000-ஐ தாண்டியது ஒருநாள் கோரோனா பாதிப்பு - 78 பேர் உயிரிழப்பு
'ஒரே நாடு' என்ற உணர்வுடன் பணியாற்றுவோம்: மாநிலங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
பிற மாநிலங்களுக்கும் உதவும் ஒரே ஆக்சிஜன் உபரி மாநிலம்! - 'கேரள மாடல்' சாத்தியமானது எப்படி?
எந்த மருத்துவமனையில் எவ்வளவு படுக்கை வசதிகள்?- முழு விவரத்தை சொல்லும் தமிழக அரசின் வலைதளம்
ஆக்சிஜன் பற்றாக்குறையால் திணறும் டெல்லி: அதிர்வூட்டும் பின்புலமும் கள நிலவரமும்!
ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால்..? - உச்ச நீதிமன்ற யோசனையும், தமிழக அரசின் வாதங்களும்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை