ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் பதிவு செய்துள்ளார்.
2021 ஐபிஎல் தொடருக்காக 8 அணிகளும் சேர்த்து மொத்தம் 57 வீரர்களை விடுவித்த நிலையில் ஐபிஎல் ஏலம் சென்னையில் பிப்ரவரி 18-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் சென்னையில் முதல் முறையாக அதற்கான ஏலம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டு நடைபெறவுள்ள ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 1097 வீரர்கள் பதிவு செய்துள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஐபிஎல் ஏலம் பிப்ரவரி 18 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என தெரிவித்தப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவை தவிர எந்தெந்த நாட்டில் இருந்து எவ்வளவு வீரர்கள் பதிவு செய்திருக்கிறார்கள் என் விவரமும் வெளியிடப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், இந்திய கிர்க்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்துள்ளார். ஏலத்திற்கு அவருக்கான குறைந்தபட்ச விலை 20 லட்சம் என்று கூறப்படுகிறது.
அர்ஜூன் டெண்டுல்கரை பொறுத்தவரை மும்பை இண்டியன்ஸ் அணிக்காக நெட் பவுலராக சில வருடங்கள் இருந்துள்ளார். கடந்த ஐபிஎல் தொடரின் போதும் ஐக்கிய அமீரத்திற்கு அவர் அணியுடன் சென்றிருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு சையது முஷ்டாக் அலி டிராபில் விளையாடினார். ஆனால், பெரிய அளவில் அர்ஜூன் சோபிக்கவில்லை. ரன்களும் குவிக்கவில்லை. பந்துவீச்சிலும் ரன்களை வாரி வழங்கினார்.
சீனியர் லெவலில் இரண்டு போட்டிகளில் மட்டுமே அர்ஜூன் விளையாடியுள்ளார் அவரை சாம்பியன் டீமான மும்பை இண்டியன்ஸ் ஏலத்தில் எடுக்குமா என்பது சந்தேகமே.
Loading More post
இதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.32 லட்சம் ஆக உயர்வு
டெல்லி: ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 24 மணிநேரத்தில் 25 நோயாளிகள் பலி; அபாயத்தில் 60 பேர்
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா? - கருத்துக்கேட்பில் வாக்குவாதம்
"கொரோனா 2-ஆம் அலையில் நுரையீரல் பாதிப்புகள் முன்கூட்டியே தொடக்கம்"- மருத்துவர்கள்
தமிழகத்தில் வசிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை