ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’ படத்தில் நடிகர் சரத்குமார் இணைந்திருக்கிறார்.
ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு காஞ்சனா 3 படம் வெளியானது. அதன்பிறகு, அவர் அக்ஷய் குமாரை வைத்து காஞ்சனா படத்தை ‘லஷ்மி’யாக இந்தியில் ரீமேக் செய்து இயக்கினார். சமீபத்தில்தான் இப்படம் வெளியானது.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘ருத்ரன்’ என்று வெளியானது. ஜி,வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தினை பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா படங்களைத் தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குகிறார். பிரியா பவானி ஷங்கர் லாரன்ஸுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்நிலையில், ருத்ரன் படத்தில் சரத்குமார் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்று படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதனால், எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. ஏற்கனவே, கடந்த 2011 ஆம் ஆண்டு காஞ்சனா படத்தில் லாரன்ஸ்-சரத்குமார் கூட்டணி ரசிகர்களை மிரட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
“எண்ணிக்கை குறைவு என்பதை விட நம்மை நடத்தும் விதம்” - கண்ணீர் விட்ட கே.எஸ்.அழகிரி!
பாமக தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத முரசு சின்னம் - கூட்டணியில் சர்ச்சை?
பீகாரில் பாஜகவுடன் கூட்டணி; மே.வ, அசாமில் எதிரணி - நிதீஷ் குமாரின் அதிரடி அரசியல் வியூகம்!
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி போட்டி
தீவிரம் காட்டும் ராகுல்... கேரளத்தில் கரையேறுமா காங்கிரஸ்?
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை