அசோக் செல்வன், ரிது வர்மா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தீனி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
'சூது கவ்வும்' படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் அசோக் செல்வன். அதனைத்தொடர்ந்து பீட்சா 11, வில்லா, தெகிடி உள்ளிட்டப்படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தீனி’. இந்தப்படத்தில் அசோக் செல்வனுடன் நடிகைகள் ரிது வர்மா, நித்யா மேனன், நாசர் உள்ளிடோர் நடித்துள்ளனர். இந்தப்படத்தை அனி.ஐ.வி.சசி இயக்கியுள்ளார் மலையாளத்தில் ‘பிரேமம்’படத்திற்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
அசோக் செல்வன் சற்று எடை அதிகமுள்ள, வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். படத்தின் ஒளிப்பதிவு ரசிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. காமெடியும் ஆழமான காதலும்,சமையலும் அதனை ஒட்டிய காட்சிகளுடன் பின்னி பிணைந்து இருக்கும் என எதிர்பார்க்கலாம் என சொல்லப்படுகிறது.
Loading More post
10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய சென்னை போக்குவரத்து காவல்துறை
கொரோனா 4-ஆம் அலை மிக ஆபத்தானது; தனியார் மருத்துவமனையை நோக்கி ஓடாதீர்கள்: டெல்லி முதல்வர்