இணையத்தில் வைரலாகும் தன்னுடைய மீம் குறித்து மாளவிகா மோகனன் கருத்து தெரிவித்துள்ளார்
ரஜினியின் ‘பேட்ட’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிய மாளவிகா மோகனன், தனது இரண்டாவது படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக ‘மாஸ்டர்’ படத்தில் ஒப்பந்தமாகி நடித்து முடித்தார். மாஸ்டர் பொங்கலுக்கு ரிலீசான நிலையில் தன்னுடைய மூன்றாவது படத்தில் தனுஷுடன் இணைந்துள்ளார். மாஸ்டர் படத்தில் மாளவிகா காதாபாத்திரம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பெரிய இடம் தரப்படவில்லை.
இந்நிலையில் அவரது புகைப்படம் சில தினங்களாக மீம் டெம்பிளேட்டாக வந்து இணையத்தில் வைரலாகியது. மாளவிகாவின் எக்ஸ்பிரஷனை பல்வேறு மீம்களாக உருவாக்கினர் மீம் கிரியேட்டர்ஸ். தற்போது அந்த மீம்கள் மாளவிகாவின் பார்வைக்கே சென்றுள்ளது.
இது குறித்து பதிவிட்டுள்ள மாளவிகா மோகனன் ''என்னுடைய மீம் என் பார்வைக்கு சிறிது தாமதமாக வந்துள்ளது. சில மீம்கள் என்னை வெடித்து சிரிக்கவைத்தது. குறிப்பாக பல் துலக்குவது போன்ற மீமை பார்த்து கடுமையாக சிரித்தேன். உங்களைப் பார்த்து சிரிக்க முடியாவிட்டால் வாழ்க்கை மிகவும் சலிப்பானது தானே? சரியா?'' என பதிவிட்டுள்ளார். மீம்களை பாசிட்டிவாக எடுத்துகொண்ட மாளவிகாவுக்கு பாராட்டுகள் என பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
I’m a little late to my own meme-fest, but this is hilarious guys? Sharing some of my personal favourites which cracked me up(I died laughing seeing the toothpaste one)? Life is too boring if you can’t laugh at yourself, right? ? pic.twitter.com/UAABIUdBZ0
— malavika mohanan (@MalavikaM_) February 3, 2021Advertisement
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி