மலையாள ரிமேக் படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான நடிகர்கள் தர்ஷன், லாஸ்லியா இணைந்து நடிக்க உள்ளனர்.
மலையாளத்தில் சுரஜ் வெஞ்சிராமூடு நடிப்பில், இயக்குநர் ரத்தீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25 படம்’ தமிழில் ரீமேக் ஆகிறது. பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கும் இந்தப்படத்தை அவரது உதவி இயக்குநர்கள் சபரி மற்றும் சரவணன் இயக்குகின்றனர். தந்தை கதாபாத்திரத்தில் வரும் ரவிக்குமாரின் மகனாக தர்ஷன் நடிக்கிறார். பெண் கதாபாத்திரத்தில் நடிகை லாஸ்லியா நடிக்கிறார். படத்திற்கு 'கூகுள் குட்டப்பன் ' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரவிக்குமார் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு பேட்டி அளித்துளார். அதில் அவர் கூறும்போது, “ சரவணனும் சபரியும் என்னிடம் 10 வருடங்களுக்கு மேலாக உதவி இயக்குநர்களாக பணியாற்றினர். அவர்கள் இருவரும் இந்த படத்தை ரீமேக் செய்ய விருப்பம் தெரிவித்ததுடன், அந்தப் படத்தில் வரும் தந்தை கதாபாத்திரத்தை நான் செய்யுமாறு கேட்டனர்.
ஆனால் சில காரணங்களால் அந்தப்படம் தடைப்பட்டு நின்றது. அதன் பின்னர் அந்த படத்தின் உரிமையை நான் வாங்கி, தயாரிக்க முன்வந்தேன். இதில் எனக்கு மகனாக நடிகர் தர்ஷன் நடிக்கிறார்.பெண் கதாபாத்திரத்தில் நடிகை லாஸ்லியா நடிக்கிறார். துணை கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபுவும், வில்லனாக ப்ராங்ஸ்டர் ராகுல் நடிக்கின்றனர்.
ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்தின் இசைப்பணி இன்று தொடங்குகிறது. படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 15 முதல் தென்காசி, குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறுகிறது. படத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் ரோபோ ஒன்று நடிக்க உள்ளது. அதிகப்படியான வி.எப்.எக்ஸ் காட்சிகளும் இடம்பெறுகின்றன.” என்றார்.
Loading More post
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
மநீம - சமக - ஐஜேகே கூட்டணி? கமலுடன் சரத்குமார் சந்திப்பு!
பெட்ரோல் டீசலுக்கு லோன் தாங்க.. வங்கியில் மனு கொடுத்த இளைஞர்கள்!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'