இந்தியாவில் முதன் முறையாக பொருட்களை ஏற்றிச்செல்லும் வகையிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒகினாவா நிறுவனம் கடந்த வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதன் வசதிகளை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
ஒகினாவா டுவல் ஸ்கூட்டரின் ஸ்பெஷல் என்னவென்றால், அதன் இரு முனைகளிலும் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கான இட வசதி அதிகம். அந்த இட வசதியை, நாம் வெவ்வேறு வகைகளில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் விநியோகப் பெட்டி, பொருட்களை அடுக்கக்கூடிய கிரேடுகள், குளிர் சேமிப்பு பெட்டிகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இதன் மூலம் இதனை விநியோக நிறுவனங்களின் பல தரப்பட்ட தேவைகளுக்கு இந்தக் ஸ்கூட்டரை பயன்படுத்திக்கொள்ள முடியும். இதன் விலை 58, 998 ரூபாயாக இருக்கிறது.
250 வாட் திறன் கொண்ட மோட்டரை உள்ளடக்கிய இந்த ஸ்கூட்டரின் மேக்ஸிமம் வேகம் 25 கிலோமீட்டர்தான். இதன் மூலம் நீங்கள் வாகனத்தை பதிவு செய்யவோ அல்லது ஓட்டுநர் உரிமம் பெறவோ தேவையில்லை. இந்த ஸ்கூட்டரில் பயன்படுத்தப்படும் பேட்டரியின் பவர் 48W 55Ah. இதனை வாகனத்தில் இருந்து பிரித்தும் பயன்படுத்த முடியும்.
1 1/2 மணி நேரத்தில் 80 சதவீத ஆற்றலை சேமிக்கும் திறன் கொண்ட இந்த பேட்டரியானது, முழுவதுமாக சார்ஜ் ஆக 4 மணிநேரம் முதல் 5 மணி நேரம் வரை எடுத்துக்கொள்ளும். ஒரு முறை நீங்கள் பேட்டரியை முழுமையான சார்ஜ் செய்தால் 130 கிமீ வரை பயணிக்க முடியும். இது மட்டுமன்றி ரிமோட் மூலம் வாகனத்தை ஸ்டார்ட் செய்தல் , சார்ஜ் செய்ய தேவையான போர்ட், போன் வைத்து கொள்ள பிரேத்யக இடம் போன்ற வசதிகளும் இருக்கிறது.
பர்சனல் தேவைக்காக வெளியிட்டுள்ள மற்றொரு ரக ஒகினாவா டுவல் ஸ்கூட்டரில் 48W 55Ah ரக பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியானது 45 நிமிடங்களில் 80 சதவீத சார்ஜைப் பெற்று விடும். இதற்கு 3 வருட அல்லது 30,000 கிலோமீட்டர் பயணம் வாரண்டி கொடுக்கப்படுகிறது.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?