அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் களமிறங்கிய ஜோ பைடன் அதிபராகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் வெற்றியை அறுவடை செய்தனர். இதன் தொடர்ச்சியாக, இன்று முறைப்படி பதவியேற்பு விழா நடைபெறுகிறது. பதவியேற்பிற்காக தனது சொந்த நகரான டெலாவேரிலிருந்து பைடன் தனி விமானத்தில் வாஷிங்டன் டி.சி-க்கு மனைவி, மகன், பேரக் குழந்தைகள் உடன் புறப்பட்டார்.
புறப்படும் முன் டெலாவேர் மக்கள் மத்தியில் பேசிய பைடன், ``அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கப்போவதில் பெருமை கொள்கிறேன். அதிபர் ஆனாலும், நான் எப்போதும் டெலாவேர் நகரின் மகன் என்பதில்தான் எனக்கு பெருமை. இன்று நானும் எனது குடும்பமும் வாஷிங்டன் செல்கிறோம். என்னுடன் தெற்காசியாவைச் சேர்ந்த கறுப்பினப் பெண், துணை அதிபராகப் பதவியேற்கப்போகிறார். அவரைச் சந்திக்கப் போகிறேன்" என்றவர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வடித்தார்.
பின்னர் சிறிதுநேரத்தில் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேசியவர், ``வாஷிங்டன் நகருக்கு இது என்னுடைய 2-வது பயணம். இது மிகவும் உணர்ச்சிகரமானது. உங்கள் அனைவருக்கும் எனது குடும்பம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் நினைப்பதை முழுமையாக உங்களிடம் பேச இயலவில்லை. ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன்... போராட்ட குணம், நல்ல குணம், அதன்படி உலகைக் காண்பது என அனைத்துமே டெலாவேரிலிருந்துதான் எனக்கு கிடைத்தது.
டெலாவேர்தான் எனக்கு தாய், தந்தையை வழங்கி வாழ்வாதாரத்தையும் கொடுத்தது. சிறு வயதிலேயே என்னை செனட்டராகத் தேர்ந்தெடுத்து என் மீது இன்றுவரை நம்பிக்கை வைத்துள்ளது" என்று உணர்ச்சிமிகுதியில் பேசினார் பைடன்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!