தனது முயற்சியால் உலக நாடுகள் அமெரிக்காவை மீண்டும் மதிக்கத் தொடங்கியிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவரது பதவிக்காலம் இன்றுடன் முடிவதையொட்டி நாட்டுமக்களிடம் விடைபெறும் வகையில் காணொலி மூலம் உரையாற்றிய ட்ரம்ப் கடந்த நான்கு ஆண்டுகளில் நாட்டை புத்தாக்கம் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததாக கூறியுள்ளார். அமெரிக்காவை மீண்டும் மகத்தான நாடாக மாற்றும் குறிக்கோளுடன் செயல்பட்டதாகவும், அனைவரும் இணைந்து இலக்கை அடைந்திருப்பது பெருமிதமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக பதவியேற்கவுள்ள நிர்வாகத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள ட்ரம்ப், அவர்களுக்கு அதிர்ஷ்டம் துணை நிற்கட்டும் என்றும் தெரிவித்தார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்ததாக கூறிய ட்ரம்ப், அரசியல் வன்முறை அமெரிக்கர்கள் மதிக்கும் அனைத்திற்கும் எதிரானது என்றும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்கு மிகக் குறைந்த காலத்தில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாக பெருமிதம் தெரிவித்த ட்ரம்ப், வேறொரு நிர்வாகமாக இருந்திருதால் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க 10 வருடம் கூட எடுத்திருக்கலாம் என குறிப்பிட்டார்.
Loading More post
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
"முழு முடக்கத்திற்கு வாய்ப்பில்லை" - தமிழக அரசு தகவல்
”தடுப்பூசிக்கும் விவேக் மரணத்திற்கும் சம்பந்தம் இல்லை” - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
கொரோனா பரவல்: தேர்தல் பேரணிகளை ரத்து செய்த ராகுல் காந்தி
தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி