பைசர் பயோஎன்டெக் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்ட முதியவர்கள் 23 பேர் இறந்துவிட்ட சம்பவம் நார்வேயில் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது
பைசர் தடுப்பூசி செலுத்தப்பெற்ற 23 முதியவர்கள் உயிரிழந்ததாக நார்வே அரசு தெரிவித்துள்ளது. 23 பேரைத் தவிர, தடுப்பூசி செலுத்தப்பட்ட பலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். இந்த இறப்புகள் குறித்து விசாரணையை நார்வே அரசு முடுக்கிவிட்டுள்ளது.
ஏற்கெனவே பலவீனமான உடலைக் கொண்ட 80 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே பாதகமான எதிர்வினைகள் இந்த தடுப்பூசி ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஃபைசர் தடுப்பூசிக்கும் இந்த மரணங்களுக்கும் நேரடி தொடர்பு இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், இறந்த 23 பேரில் 13 பேர் வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் காய்ச்சல் போன்ற எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளின் பொதுவான அறிகுறிகளைக் கொண்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
நார்வேயில் ஏற்பட்ட இந்த மரணங்கள் குறித்த கவலைகளைத் தொடர்ந்து ஐரோப்பாவில் அதன் தடுப்பூசி விநியோகத்தை தற்காலிகமாக குறைக்க பைசர் முடிவு செய்தது. மேலும் 80 வயதிற்கு மேற்பட்ட வயதானவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு எதிராக நார்வே பொது சுகாதார நிறுவனம் இப்போது எச்சரிக்கை விடுத்துள்ளது.
எப்படியிருந்தாலும் குறுகிய ஆயுட்காலம் உள்ளவர்கள் தடுப்பூசியால் பெரிதும் பயனடையமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளது. டிசம்பர் மாத இறுதியில் இருந்து இதுவரை நார்வேயில் பைசர் மற்றும் மாடர்னா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸை 30,000-க்கும் மேற்பட்டோர் பெற்றுள்ளனர்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி