இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பின்னர் அந்த முடிவுகளின் அடிப்படையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாய்னா இன்று ஆரம்பமாகி உள்ள தாய்லாந்து ஓபன் 2021 பேட்மிண்டன் தொடரில் விளையாட இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
I still didn’t receive the covid test report from yesterday it’s very confusing and today just before the warm up for the match they tell me to got to hospital in bangkok ... saying that I m positive ..according to rules the report should come in 5 hours.. @bwfmedia https://t.co/ETkWiNVHnP — Saina Nehwal (@NSaina) January 12, 2021
அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பதை கண்டறிந்ததும் பேங்காக்கில் உள்ள மருத்துவமனையில் பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல அவருடன் பயணித்த மற்றொரு பேட்மிண்டன் வீரர் காஷ்யப்பும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதனால் இருவரும் முதல் சுற்றில் வால்க் ஓவர் என அறிவித்துள்ளது பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு. இதை இந்திய பேட்மிண்டன் அசோஸியேஷனும் உறுதி செய்துள்ளது.
இருந்தாலும் பரிசோதனை முடிவுகள் தனக்கு கொடுக்கப்படவில்லை எனவும், அதிகாரிகள் தான் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை வாய்மொழியாக தெரிவித்ததாகவும் சாய்னா தெரிவித்துள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றில் டென்மார்க் வீராங்கனையிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். கிட்டத்தட்ட 300 நாட்களுக்கு பிறகு நடத்தப்படும் சர்வதேச பேட்மிண்டன் தொடர் இது.
@Pvsindhu1 kept fighting in the 3rd game but it was not to be!
Score: 21-16, 24-26, 13-21
Tough luck, champ! #ThailandOpen2021 #ThailandOpenSuper1000 #badminton pic.twitter.com/qEWLJolM03 — BAI Media (@BAI_Media) January 12, 2021
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு