[X] Close >

காலையில் எழுந்து நிற்கவே அவரால் முடியவில்லை, எப்படிதான் விளையாடினாரோ! அஷ்வின் மனைவி ட்வீட்

Ravichandran-Ashwin-s-life-partner-Prithi-Ashwin-amazed-by-witnessing-her-husband-s-classic-innings-against-Australia-at-SCG

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியை சமனில் முடித்துள்ளது. இதன் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1 - 1 என்ற சமநிலையில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் விகாரி மற்றும் அஷ்வினின் பேட்டிங் கூட்டணி. இந்நிலையில் அஷ்வினின் வெற்றிகரமான ஆட்டத்திற்கு பிறகு அவரது மனைவி ப்ரீத்தி அஷ்வின் ட்வீட் செய்துள்ளார். 


Advertisement

image

“பயங்கரமான முதுகு வலியுடன் தான் நேற்று இரவு தூங்க சென்றிருந்தார் அவர். இன்று காலை எழுந்திருத்த போது அவரால் நேராக நிற்கவே முடியவில்லை. குனிந்து ஷூவின் லேஸை போடவே சிரமப்பட்டார். ஆனால் இன்றைய ஆட்டத்தின் மூலம் அனைவரையும் ஆச்சரியிக்க செய்தார். அவர் தான் அஷ்வின்” என அந்த ட்வீட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார். 


Advertisement

அதே  ட்வீட்டை மீண்டும் ரீ ட்வீட் செய்த அவர் “மூட்ட முடிச்சுகளை எடுத்துக்கட்ட இப்போது எனக்கு யார் உதவுவார்கள். Thatthatmanthatthatproblem” என குறிப்பிட்டுள்ளார். அஷ்வின் இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 128 பந்துகளுக்கு 39 ரன்களை குவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close