சிட்னி டெஸ்ட் போட்டியை ட்ரா செய்த இந்திய அணிக்கு ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியை ட்ரா செய்தது . இந்திய அணியின் விஹாரி, அஸ்வின் ஜோடி அபாரமாக விளையாடி டெஸ்ட் போட்டியை ட்ராவை நோக்கி இழுத்துச் சென்றது. குறிப்பாக விஹாரி கொடூர டெஸ்ட் போட்டியை ஆடினார். 161 பந்துகள் சந்தித்த அவர் 23 ரன்கள் எடுத்தார். அஸ்வின் 128 பந்துகளை சந்தித்து 39 ரன்கள் எடுத்தார். ட்ரா செய்துவிட வேண்டுமென்ற எண்ணத்திலேயே இருவரும் ஆடினர். ஆஸி பந்துவீச்சாளர்கள் ஏதேதோ செய்தனர். ஆனால் விஹாரி-அஸ்வின் ஜோடியை அசைக்க முடியவில்லை.
ஆஸி வீரர்களும் களைத்துப்போக நாளும் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் இந்தியா தோல்வியடையும் என்ற நிலையை மாற்றி வெற்றிக்கு வித்திட்டனர் இரு பேட்ஸ்மேன்களும். அஸ்வின் -விஹாரி ஜோடிக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ட்ராவிட்டின் பிறந்தநாளான இன்று ட்ராவிட்டாகவே இருவரும் மாறிவிட்டனர் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்திய அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இந்திய அணியை பாராட்டியுள்ள சச்சின்,
Really proud of #TeamIndia!
Special mention to @RishabhPant17, @cheteshwar1, @ashwinravi99 and @Hanumavihari for the roles they’ve played brilliantly.
Any guesses in which dressing room the morale will be high? ?#OneTeamOneCause #AUSvIND pic.twitter.com/hG60Iy6Lva — Sachin Tendulkar (@sachin_rt) January 11, 2021
''இந்திய அணியை நினைத்து பெருமைபடுகிறேன். குறிப்பாக பண்ட், புஜாரா,அஸ்வின்,விஹாரி சிறப்பாக விளையாடினார்கள்'' எனத் தெரிவித்தார். இந்திய அணியின் வெற்றி குறித்து பதிவிட்டுள்ள லக்ஷ்மண், '' டெஸ்ட் போட்டி போராக இருக்கும் என யார் கூறியது? இந்திய அணியின் அருமையான ஆட்டம். சில முக்கிய வீரர்கள் இல்லை, சிலருக்கு காயம் ஆன போதிலும் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது'' எனத் தெரிவித்தார்
What a remarkable performance by Team India. Once again great show of resilience under grave provocation, spate of injuries and several key players missing. Bravo! #AUSvsIND — VVS Laxman (@VVSLaxman281) January 11, 2021
Loading More post
சிறுத்தையை கொன்று கறி விருந்து: கேரளாவில் ஐந்து பேர் கைது!
தமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு
''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு
5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’