வாரணாசியில், முன்னாள் பாஜக எம்.எல்.ஏ தாக்கப்படும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி, சாபிபூரில் அமைந்துள்ள தனியார் கல்லூரியின் முதல்வர் மாயா ஷங்கர் பதக். வாரணாசி தொகுதியின் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ வான இவர் இரு சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
Maya Shankar Pathak, a former 2-time MLA who now runs an engineering college in Varanasi being thrashed by locals for allegedly sexually harassing a student. pic.twitter.com/48QpSjmcUD
— Lost Musafir (@MusafirPankaj26) January 11, 2021Advertisement
70 வயதான பதக் தனது கல்லூரியில் படிக்கும் மாணவி குறித்து கருத்து தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனை அந்தப் பெண் அவரது குடும்பத்தினரிடம் கூற, அவரது குடும்பத்தினரும் இன்னும் சில நபர்களும் கல்லூரிக்கு வந்து பதக்கை தாக்கப் முற்பட்டனர் . இதனால் பதக்குக்கும் சம்பந்தப்பட்ட பெண் குடும்பத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இறுதியில் பதக் தன் காதைப் பிடித்துக்கொண்டு, பெண் குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
Varanasi: Maya Shankar Pathak, a former BJP MLA, was beaten up by a group of people in Chaubepur area on January 9 for allegedly molesting a girl student of a college owned by him.
(Screenshots of viral video) pic.twitter.com/3WJdbp9GRc— ABHAY socialist (@Avyadav18) January 10, 2021Advertisement
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் காவல்துறையினர் பதக்கை தொடர்புகொள்ள முயற்சித்தனர். ஆனால் பதக்கோ இது தொடர்பாக தான் எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார். அதேபோல் பதக்கை தாக்கிய மாணவியின் குடும்பத்தினரும், அவர் மீது புகார் அளிக்க மறுத்து விட்டனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த வாரணாசி பாஜக தலைவர் ஹான்ஸ் ராஜ் விஸ்வகர்மா கூறும்போது, “ பதக் இரு முறை வாரணாசி சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ளார். ஆனால் அவர் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபடவில்லை” என்றார்.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?