குஜராத்தைச் சேர்ந்த 62 வயதான நவல்பென் தல்சங்பாய் சவுத்ரி என்ற பெண் கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் 1.10 கோடி ரூபாய்க்கு பால் விற்று சாதனை படைத்துள்ளார்.
பனஸ்கந்தா மாவட்டத்தில் நாகனா கிராமத்தைச் சேர்ந்த நவல்பென், தனது மாவட்டத்தில் ஒரு சிறு புரட்சியையே நடத்தி வருகிறார். ஆம், 2020 ஆம் ஆண்டில் மட்டும் ரூ 1.10 கோடி மதிப்புக்கு பாலை விற்று, ஒவ்வொரு மாதமும் ரூ 3.50 லட்சம் லாபம் ஈட்டியதன் மூலம் அவர் அனைவரும் வியக்கத்தக்க சாதனை படைத்துள்ளார். 2019 ஆம் ஆண்டில் அவர் ரூ 87.95 லட்சம் மதிப்புள்ள பாலை விற்பனை செய்திருந்த நிலையில் இந்த ஆண்டு ஒரு கோடியை தாண்டியுள்ளார்.
நவல்பென் தனது வீட்டில் ஒரு பால் பண்ணையைத் தொடங்கினார். ஆனால் இப்போது அவரிடம் 80-க்கும் மேற்பட்ட எருமைகளும் 45 பசு மாடுகளும் உள்ளன. இவை பல கிராமங்களைச் சேர்ந்த மக்களின் பால் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.
இதுபற்றி பேசிய நவல்பென் “எனக்கு நான்கு மகன்கள் உள்ளனர், அவர்கள் நகரங்களில் படித்து வேலை செய்கிறார்கள், ஆனால் அவர்கள் என்னைவிட குறைவாகவே சம்பாதிக்கின்றனர். தற்போது நான் 80 எருமைகள் மற்றும் 45 மாடுகள் கொண்ட ஒரு பால்பண்ணை நடத்துகிறேன். 2019 ஆம் ஆண்டில், ரூ 87.95 லட்சம் மதிப்புள்ள பாலை விற்று பனஸ்கந்தா மாவட்டத்தில் முதல் இடத்தில் இருந்தேன். 2020 ஆம் ஆண்டில் ரூ 1 கோடி 10 லட்சம் மதிப்புள்ள பாலை விற்பனை செய்வதன் மூலம் இந்த ஆண்டும் முதலிடத்தில் இருக்கிறேன் ”என்று அவர் கூறினார். நவல்பென்னிடம் இப்போது 15 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள், அவரது பால் விற்பனை சாதனை பனஸ்கந்தா மாவட்டத்தில் இரண்டு லட்சுமி விருதுகள் மற்றும் மூன்று சிறந்த பசுபாலக் விருதுகளை வென்றுள்ளது.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?