திண்டுக்கல் அருகே உள்ள ரெட்டியார் சத்திரத்தில் பெற்ற தாயை அடித்துக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள தோப்புப்பட்டியைச் சேர்ந்தவர் முத்தம்மாள் (71). தனியாக வசித்து வரும் இவருடைய மகன் ரத்தினவேல். இவர் அதே ஊரில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் தாய்க்கும் மகனுக்கும் இடையே பல வருடங்களாக குடும்ப தகராறு இருந்து வருகிறது. இதனால் அடிக்கடி தனது தாயுடன் ரத்தினவேல் தகராறில் ஈடுபடுட்டுள்ளார். இந்நிலையில் இன்று மதுபோதையில் இருந்த ரத்தினவேல் தனது தாயுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது தனது தாய் முத்தமாளை கீழே தள்ளி தாக்கியுள்ளார். இதில் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த முத்தமாளை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக ரெட்டியார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரத்தினவேலை கைது செய்தனர். மதுபோதையில் பெற்ற தாயை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?